1லிட்டர் பெட்ரோல் 15 ரூபாய்… நிதின் கட்கரி அதிரடி… என்னது அப்படியா… ஆச்சரியத்தில் மக்கள்..!!

ந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களாக குறையாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மாதங்கள் வேகமாக குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் தொடர்ந்து உயர்வான விலைக்கே விற்கப்படுகிறது.

இதன் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தை பார்த்து வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். இப்படியிருக்கும் சூழ்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு லிட்டர் பெட்ரோல்-ஐ வெறும் 15 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் வியப்பையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை ராஜஸ்தானில் முக்கிய திட்டங்கள் திறந்து வைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அம்மாநில மக்களிடம் பேசினார்.

அப்போது வாகனங்களில் பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் எரிபொருள்-ஐ முழுமையாக பயன்படுத்த வேண்டும். இப்படி இந்தியாவில் பயன்படுத்தும் வாகனங்கள் சராசரியாக 60 சதவீதம் எத்தனால் மற்றும் 40 சதவீதம் மின்சாரத்தை எரிபொருளாக பயன்படுத்தினால் பெட்ரோல்-ஐ லிட்டருக்கு வெறும் 15 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும் என்று பிரதாப்கர் பகுதியில் மக்களிடம் பேசும் கூறினார்.

இந்திய வாகன சந்தை clean fuel-க்கு மாறுவதன் மூலம் நாட்டின் மாசுபாடும், இறக்குமதி செலவுகளும் குறையும் என்று மத்திய அமைச்சர் கூறினார். இந்திய அரசு சுமார் 16 லட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி-க்காக செலவு செய்கிறது.

இதேவேளையில் இந்தியாவில் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்திலும் பயன்படுத்தும் எத்தனால்-ஐ இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்வதால் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பது மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் 16 லட்சம் கோடி ரூபாயும் விவசாயிகளின் வீடுகளுக்குச் செல்லக்கூடும் என்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.