பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம்| அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற கைக்கட்டு பிரகாஷ் (வயது 54) இவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கஞ்சா விற்றதாக கைது செய்தனர்.இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது சாய்பாபா காலனி, வடவள்ளி காவல் நிலையங்களில் கஞ்சா விற்றதாக வழக்குகள்நிலுவையில் உள்ளன.தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வருவதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் உண்டு பத்ரி நாராயணன் உத்தர பிறப்பித்தார் .இதன் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பிரகாசைநேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு வழங்கப்பட்டது.