சேலத்தில் அசல் நோட்டைப் போலவே இருக்கும் போலி 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.இப் போலி நோட்டுகளில் வரிசை எண்கள் ஏதுமின்றி, “FULL OF FUN” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.அசல் நோட்டின் நிறம் மற்றும் தோற்றத்தில் இருப்பதால், பொதுமக்களும் வியாபாரிகளும் கவனக்குறைவால் ஏமாற அதிக வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் பணப் பரிவர்த்தனைகளின் போது விழிப்புடன் இருக்குமாறும், இத்தகைய போலி நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவோர் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.









