போலீஸ் வேடத்தில் வியாபாரியிடம் கத்தி முனையில் புது பெருங்களத்தூர் ரயில்வே நடை மேம்பாலத்தில் ரூ 20 லட்சத்தை கொள்ளையடித்தவர்கள் கைது…

புது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் சாலை முதல் தளம் ஷேக் அப்துல்லா காதர் மகன் சிராஜுதீன் வயது 33 புது பெருங்களத்தூரில் உள்ள மெட்ரோ ஷூஸ் அண்ட் பேக்ஸ் கடையில் வேலை செய்து வருவதாகவும் மாதம் ஒருமுறை வியாபார சம்பந்தமாக பணம் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வருவதாகவும் மதியம் மூன்று மணிக்கு வழக்கம் போல் ரூபாய் 20 லட்சத்தை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புது பெருங்களத்தூருக்கு மின்சார ரயிலில் நடை மேம்பாலம் வழியாக வந்து கொண்டிருந்த போது பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 5 பேர் தங்களை போலீஷ் என்று கூறிக்கொண்டு கத்தியை காண்பித்து கையில் இருந்த பேக்கில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 லட்சத்தை பிடுங்கினார் எனது கையில் இருந்த இரண்டு செல்போன்களையும் பறித்துக் கொண்டனர் என்னை படிக்கட்டில் இருந்து தள்ளியும் விட்டனர் இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இதுகுறித்து ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவின் பேரில் ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு முனைவர் டி செந்தில்குமார் நேரடி மேற்பார்வையில் எழும்பூர் ரயில்வே போலீஸ் துணை சூ பிரண்ட் ரமேஷ் ஆய்வாளர் இளவரசன் சப் இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் ஆர் பி எஃப் காவலர்கள் சைபர் செல் ஜான் ஆகியோரை கொண்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டது இந்த தனிப்படையினர் 5 மணி நேரத்தில் தமிழ்மணி என்கிற சதீஷ் வயது 27 தகப்பனார் பெயர் மணிபாலன் கோதண்டராமபுரம் கடலூர் 2. சிவா வயது 32 தகப்பனார் பெயர் லோகநாதன் அரியூர் புதுச்சேரி 3. பாலச்சந்தர் வயது 42 தகப்பனார் பெயர் பிச்சைக்காரன் காரைக்காடு கடலூர் 4. பிரகாஷ் வயது 29 தகப்பனார் பெயர் ராஜா வசந்த ராயன் பாளையம் கடலூர் 5. சதீஷ் வயது 22 தகப்பனார் பெயர் சங்கர் பண்ருட்டி கடலூர் ஆகியோரை கைது செய்தனர் கொள்ளையர்கள் இடமிருந்து ரூபாய் 20 லட்சம் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது