கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இளைஞர் குத்திக் கொலை-போலீசார் விசாரணை..!

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (34), இவர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்வரிடம் வேலை செய்து வந்தார்.

மணிக்கண்டனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு சந்தோஷ்குமார் மற்றும் மணிகண்டனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த மணிகண்டனின் தம்பி சுதிர் சந்தோஷை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.