நெடுஞ்சாலையில் நின்ற வாகனம் மீது மோதி இளைஞர் பலி
கோவை கே.ஜி.சாவடி அருகே நெடுஞ்சாலையில் நின்ற வேன் மீது மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் வெற்றி விஜயன் (37). இவர் கோவை நவக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வெற்றி விஜயன் வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு மாலை மீண்டும் வீட்டிற்கு கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார், அப்போது கே.ஜி.சாவடி அருகே வந்த போது முன்னாள் சென்ற கேஸ் ஏற்றிச் சென்ற வேன் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது. இதை எதிர்பார்க்காத வெற்றிவிஜயன் வந்த தனது பைக்கை நிறுத்த முயன்றார், ஆனால் கட்டுப்பாட்டை இழந்த பைக் வேனின் பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகலறிந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார் வெற்றி விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, வேனை ஓட்டி வந்த சம்பத்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply