சிறை கைதி நெஞ்சு வலியால் உயிரிழப்பு

சிறை கைதி நெஞ்சு வலியால் உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையன் என்பவர் குற்ற வழக்கில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது .இதை அடுத்து சிறையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர் .பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகள் பிரிவிற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரவேண்டும்.