மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா – வீடியோ இணைப்பு.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற
தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேஷ் சந்தர் வரவேற்பு உரையாற்றினார். பொருளாளர் ஸ்டீபன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கார்த்திக் மகாராஜா மருத்துவர் மருத்துவர் சசிகுமார் தாரணி பிரியா ஆகியோர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மருத்துவர் சசித்திரா மருத்துவர் விஜயகிரி மருத்துவர் இஸ்மாயில் ஆகியோர் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தாய்மார்கள் இடையே தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார்கள் .

அப்போது அவர்கள் பேசுகையில், தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் ”தாய் பாலில் எல்லா வகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு இது காரணமாகிறது. தாய் பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பெற்றெடுத்த பிறகு மன சோர்வுகள் போன்றவற்றிலிருந்து தாய்மார்களை பாதுகாக்கிறது” என கூறினர். இது அங்கு கூடியிருந்த தாய்மார்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது

இதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உள்ளிட்ட உணவு பொருட்களை மேட்டுப்பாளையம் இன்னர் வீல் சங்க தலைவர் சக்தியா சீனிவாசன் செயலாளர் ஹேமலதா ஜெயக்குமார் பொருளாளர் ஆனந்தி தினேஷ்
ஆகியோர் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் அரசு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..