தொழிலாளியை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறிப்பு -4 பேருக்கு வலை..!

கோவை அருகே உள்ள பட்டணம் ,ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாத் குமார் ( வயது 22) பிளம்பிங் வேலை செய்து வந்தார் இவர் நேற்று ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி அருகேஉள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் தனது நண்பர்கள் ஓம் பிரகாஷ், விஜய் ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர் .அந்த கும்பல் பிரசாத் குமாரை கத்தியால் குத்தி அவரிடம் இருந்து செல்போன் பணம் ரூ 1200 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டது.இதுகுறித்து பிரசாத் குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அதே பகுதியை சேர்ந்த சரவணன், ஹரி உட்பட 4பேரை தேடி வருகிறார்கள்.