ரோட்டில் உயிருக்கு போராடிய மூதாட்டியை காப்பாற்றிய கோவை போலீஸ்காரர் -குவியும் பாராட்டுக்கள்..!!

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ஸ்ரீதர்.இவர் இன்று காலையில் கோவை திருச்சி ரோட்டில் புதிய மேம்பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தார்.அப்போது ரோட்டில் படுத்திருந்த ஒரு மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அதை பார்த்த போலீஸ்காரர் அந்த மூதாட்டியிடம் சென்று முதலுதவி செய்து முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் கொடுத்தார். பின்னர்ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.அந்த மூதாட்டி பேட்டரிகளுக்கு ஊற்றக்கூடிய தண்ணீர்பாட்டிலில் இருந்த தண்ணீரை தவறுதலாக குடித்து விட்டது தெரிய வந்தது.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உயிருக்கு போராடிய மூதாட்டியை காப்பாற்றிய போலீஸ்காரர்ஸ்ரீதரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.