வீடு கட்டுவதற்க்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி தற்கொலை..

கோவை :தேனி மாவட்டம், உத்தமபாளையம் பக்கம் உள்ள மார்க் கேயன்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துராஜா’ இவரது மகன் ஈஸ்வரன் (வயது 31 )இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் .அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி இருந்தார் .மேலும் தனது உறவினர்களிடமும் பணம் வாங்கி இருந்தாராம் .அதை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை .இதனால் மனமுடைந்த ஈஸ்வரன் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்த அவரது மனைவி இந்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.