இரும்பு வியாபாரி தீக்குளித்து தற்கொலை..

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் அருந்ததியர் விதியை சேர்ந்தவர் முத்துசாமி ( வயது 67 )பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது காலில் பாதிப்பு ஏற்பட்டது.இதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம். உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து அவரது மனைவி வள்ளியம்மாள்(வயது 65) பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.