கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை புது சித்தாபுதூர் சி. கே .காலனி சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 62 )இவர் நேற்று அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஆனந்தன் மனைவி கழுத்தில் கிடந்த செயினை பறித்தான். அவனை ஆனந்தன் மற்றும் அருகில் நின்றவர்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள இரட்டை குளத்தைச் சேர்ந்த சுனில் குமார் (வயது 34) என்பது தெரியவந்தது. இவர் தற்போது ரத்தினபுரி செக்கான்தோட்டம் 2 -வது வீதியில் தங்கி இருந்து பிளம்பர் வேலை செய்து வந்தார். இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.