குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் தங்க நகைகள் அபேஸ் செய்த பெண்-போலீஸ் வலை..!

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது63) இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த10 நாட்களுக்கு முன்பு இவர் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது இவரது கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றார்.அவரிடம் பூ வாங்கினார் .பின்னர் தினமும் காலையிலும் மாலையிலும் அவரது கடைக்கு செல்ல தொடங்கினார்.இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து முத்துலட்சுமி அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். வீட்டில் வைத்து அந்த பெண் முத்துலட்சுமியிடம் உங்களுக்காக குளிர்பானம் வாங்கி வந்துள்ளேன் என்று கூறி அதை குடிக்க செய்துள்ளார்.அதை குடித்ததும் முத்துலட்சுமி மயக்கம் அடைந்தார். 3 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. அவர் அணிந்திருந்த மொத்தம் 3 பவுன் எடை கொண்ட தங்க செயின் ,மோதிரம் ,கம்மல் ஆகிவற்றையும்,காணவில்லை.குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை அந்தப் பெண் கொள்ளையடித்து சென்று விட்டார். இவைகளின் மொத்த மதிப்பு ரூ 1 லட்சம் இருக்கும். இதுகுறித்து முத்துலட்சுமி பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.