மகன் உயிரிழந்தது தெரியாமல் பிணத்துடன் 3 நாட்கள் ஒரே வீட்டில் தங்கி இருந்த தாய்-கோவையில் பரிதாபம் ..!!

கோவை: கோவை ஆவாரம்பாளையம், வள்ளி நகரை சேர்ந்தவர் சி பி சுப்பிரமணியம் (வயது 43) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தயார் வசந்தா ( வயது 68 ) இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சுப்பிரமணியம் தனது தாயாரை கவனித்து வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. அப்போது வீட்டின் கதவு உள் பக்கம் பூட்டபட்டிருந்ததது.இதையடுத்து போலீசார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சிபி சுப்ரமணியம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார் .மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் அவர் இறந்து 3 நாட்களில் இருக்கும் என்ற போலீசார் தெரிவித்தனர் .அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தாயார் வசந்தா மற்றொரு அறையில் மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்தால் மயங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிபி சுப்பிரமணியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்தது கூட தெரியாமல் பிணத்துடன் தாய் ஒரே வீட்டில் தாய் இருந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.