வீடு வீடாக சென்று மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண் கைது..!

  1. ஈரோடு திருநகர் காலனி பகுதியில் 34 81 எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது.. கடையின் அருகாமையில் கொலை மற்றும் கொள்ளை உட்பட வன்முறை சம்பவங்களும் பள்ளி மாணவ மாணவியருக்கும் பொது மக்களுக்கும் பெரும் இடையூறாக கடை செயல்பட்ட நிலையில் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது… இந்த நிலையில் கடையின் அருகாமையில் குடிமகன்களிடையே கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ததாக ஏற்கனவே மூன்று முறை ஐந்துக்கும் மேற்பட்டோர் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கே என் கே ரோடு பகுதியில் பெண் ஒருவர் வீடு வீடாக சென்று குடிமகன்களிடை யே கூடுதல் விலைக்கு மதுபான்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை எடுத்து மதுவிலக்கு போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சுமதி என்பவர் அவர் வசித்து வந்த வாடகை வீட்டில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களுக்கு வீடு வீடாகச் சென்று மது விற்பனை செய்தது தெரிய வந்தது.தொடர்ந்து அவர் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசார் சுமதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..