கோவை பால் பண்ணையில் போலி கணக்கு எழுதி மோசடி- பணத்தை ஆட்டைய போட்ட ஊழியர் கைது..!

கோவை, கணபதி எப்.சி.ஐ ரோட்டில் பால் பண்ணை இயங்கி வருகிறது . அபிநயா என்பவர் பால் பண்ணையை மேற்பார்வை செய்து வருகிறார். இவர்களது பண்ணையில் வேலூரைச் சேர்ந்த சஞ்சய் சாம்சன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்த நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பால் பண்ணையில் வேலையில் சேர்ந்த சஞ்சய் சாம்சன் அவ்வப் போது தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டு உள்ளார் .அதற்கு அபிநயா பணத்தைக் கொடுத்து உள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த 11 ஆம் தேதி தனக்கு அட்வான்ஸ் ஆக ரூபாய் 48 ஆயிரம் வேண்டும் என்று கேட்டு அபிநயா – விடம் வாங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊருக்கு சஞ்சய் சாம்சன் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து சஞ்சய் சாம்சனுக்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து பண்ணையின் கணக்குகளை சரிபார்த்த போது பொய்யான கணக்குகள் எழுதப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் பண்ணையில் இருந்த சி.சி.டி.வி பதிவுகளை அழித்து விட்டு பணி செய்ய வைத்து இருந்த லேப்டாப் போன்றவற்றையும் பணம் ஒரு லட்சத்தையும் எடுத்துச் சென்று உள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அபிநயா புகார் அளித்ததை தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது சென்னை அடுத்த ஆவடி பகுதியில் பதுங்கி இருந்த சஞ்சய் சாம்சனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சஞ்சய் சாம்சனுக்கு வேலூரை சேர்ந்த ஹரி என்பவர் உதவி செய்தது தெரியவந்தது .மேலும் போலீசார் ஹரியை தேடி வருகின்றனர்..