ஹிந்துக்களுக்கு ஆதரவானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு கொடுப்போம்-காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவிப்பு.!!

திருப்பூர்:”உள்ளாட்சி தேர்தலில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு ஆதரவு அளிக்கப்படும்,” என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

திருப்பூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஹிந்து முன்னணி அரசியல் கட்சி கிடையாது. ஆனால், நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில், திருச்சியில் நடந்த ஹிந்து முன்னனி நிர்வாக குழு கூட்டத்தில், தேர்தலில் ஹிந்துக்களுக்கு எதிரானவர்களை தோற்கடிக்க வேண்டும். பசுவதை தடுப்புச் சட்டம், கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருபவர்களை ஆதரிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, ஹிந்துக்களுக்கு ஆதரவானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு கொடுப்போம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி வேலை நிறுத்தத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு, காடேஸ்வரா சுப்பிரமணி கூறினார்.