உஷார்!! 2,915 பேருக்கு டெங்கு காய்ச்சல்… அடுத்த 3 மாதங்களுக்கு அதிகரிக்கும் … எச்சரிக்கும் சுகாதாரத்துறை..!

மிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரைக்கும் 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேர் என்றும், செப்டம்பர் மாதம் 572 பேர் என்றும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் 164 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலம் என்பதால் தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் என்றும், அதனால் பொதுமக்கள் கவனமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.