ஒவ்வொரு பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வைத்தவர் பிரதமர் மோடி – வானதி சீனிவாசன் புகழாரம்.!!

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் பிஜேபி கட்சியின் சார்பில் மகளிர் பிரதிநிதிகள் கூட்டம் வானதி சீனிவாசன் தலைமையில் நடந்தது.

இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பேசுகையில், ‘பெண்களுக்கு உண்டான மரியாதையை கொடுக்கும் கட்சி பிஜேபி கட்சி தான் என நரேந்திர மோடி சொல்லி வருகிறார். அதனால் தான் படிப்பறிவு இல்லாத பெண்களை பற்றி கூட மோடி யோசித்து வருகிறார். யார் மத்தியில் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதற்கான தேர்தல் இது. மேலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நாங்குநேரி, ராதாபுரம் தொகுதியில் பிஜேபி வளர்ந்துவிட்டது.

மேலும் ஆண்கள் கையில் பணம் போகின்றது. அவர்கள் டாஸ்மார்க் கொடுத்து வருகிறார்கள். ஆனால் பெண்கள் கையில் பணம் செல்லவில்லை என்பதற்காக பெண்கள் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வைத்தவர் பிரதமர் மோடி.

கேஸ் சிலிண்டர் விலை 300 ரூபாய் பணம் குறைத்தவர் மோடி. அனைவருக்கும் வீட்டு திட்டம் தமிழகத்தில் இலவச வீடு திட்டத்திற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அவர்கள் வங்கி கணத்தில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. குடி தண்ணீருக்காக இரண்டு, மூன்று கிலோமீட்டர் அலைந்த நிலை மாறி வீட்டில் தண்ணீர் பெரும் திட்டத்தைக் கொண்டு இருந்தவர் மோடி. திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 500 கோடி ரூபாயில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. அது மோடியின் பணம் தான். வெளிநாடுகளில் இந்தியாவிற்கு தனி மதிப்பு ஏற்படுத்தியிருக்கிறார். வந்தே பாரத் திட்டம் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் நயினார் நாகேந்திரன்.

மத்தியில் அவருக்கு தனி செல்வாக்கு இருக்கிறது என்றும் இவரை அமோக வாக்குவாதத்தில் வெற்றி பெற செய்து பாரளுமன்றத்தில் அமரவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் சின்னக்குழந்தைக்கு கூட பிரதமர் மோடி தான் 3வது முறை ஆட்சி அமைக்கப்போகிறார் என்பது தெரியும். தொடர்ந்து பேசிய நயினார் கூறும்பொழுது, நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். நெல்லை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், நல்ல திட்டங்களையும் மத்திய அரசின் நிதியை பெற்று அதனை நிறைவேற்றி தருவேன்’ என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் ஊராட்சி கழக தலைவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.