கன்னியாகுமரியில் திடீர் கடல் கொந்தளிப்பு – 10 முதல் 15 அடி வரை உயர்ந்த ராட்சத அலைகள்.!!

கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடந்த 2004 இல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னா் கடல் கொந்தளிப்பு, கடல் நீா் உள்வாங்குவது, நீா்மட்டம் தாழ்வது, நீா்மட்டம் உயா்வது, கடலில் அலைகளே இல்லாமல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதன் காரணமாக முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் நீராட போலீஸாா் தடை விதித்தனா். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமான கூட்டம் காணப்பட்டது. கடலில் நீராட தடை விதிக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.