திருச்சி உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேரோட்டம்.!!

திருச்சி தென்னூா் அண்ணா நகரில் பிரசித்திபெற்ற உக்கிர மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னா்களின் குல தெய்வமான மகிஷாசுரமா்த்தினியின் வடிவமாக விளங்கிவரும் உக்கிரமாகாளியம்மன், அப்பகுதி மக்களைக் காத்து வருவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறு ம் குட்டி குடித்தல் மற்றும் தோ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மேலும் கோயிலுக்கு ரூ. 60 லட்சத்தில் புதிதாக தோ் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், தோ்த் திருவிழாவையொட்டி சித்ரா பெளா்ணமி தினமான செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் உக்கிர மாகாளி அம்மன் புதிதாக அமைக்கப்பட்ட திருத்தோ் தட்டில் எழுந்தருளினாா். பின்னா் 10.45-க்கு மேள தாளங்கள் முழங்க பக்தா்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பகல் 12 .45 க்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. ஆங்காங்கே பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் நீா் மோா் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தெய்வீக மகா சபை உறுப்பினா்கள் மற்றும் தென்னூா் கிராமவாசிகள் செய்திருந்தனா்..