கோவை மக்களின் கவனத்திற்கு… இனி டவுன்ஹாலில் வாகனங்களை ஒரு பக்கம் மட்டுமே பார்க்கிங் பண்ண முடியும்..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி ஒரு பக்க பார்க்கிங் முறை அங்கு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, ஒப்பணக்கார வீதியில் வைசியாள் வீதி சந்திப்பு முதல் இடையர் வீதி சந்திப்பு வரை சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. இடையர் வீதி சந்திப்பு முதல் மில் ரோடு சந்திப்பு வரை சாலையின் இடது புறம் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ராஜவீதியில் ஒப்பணக்கார வீதி சந்திப்பு முதல் ரங்கே கவுண்டர் வீதி வரை, சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. ரங்கே கவுடா் வீதி முதல் தேர்நிலை திடல் வரை வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

துணி வணிகர் சங்க பள்ளி தேர் திடல் முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஆனால் கருப்பு கவுண்டர் வீதி சந்திப்பு முதல் சலிவன் வீதி வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது. கருப்பு கவுண்டர் வீதியில் ராஜவீதி சந்திப்பு முதல் வைசியாள் வீதி வரை வலது புறம் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

பெரிய கடை வீதியில் ரங்கே கவுடர் வீதி சந்திப்பு முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்தலாம். வைசியாள் வீதியில் ரங்கே கவுண்டர் வீதி சந்திப்பில் பஸ் நிறுத்தம் எதிரே வலது புறம் நிறுத்த வேண்டும்.