பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கோவை மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்-பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு சுண்டல்..!

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் 40 க்கும் மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு சிறப்பாக எதிர்கொள்ள தயார்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாணவ – மாணவிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாலை 4.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது:

மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ – மாணவிகள் பொதுத் தேர்வில் எதிர்கொள்ளவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. அப்பொழுது சிறப்பு கவனம் எடுத்து ஆசிரியர்கள் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு வகுப்பில் பங்கேற்க மாணவ – மாணவிகள் சோர்வு அடையாமல் இருக்க அவித்த சுண்டல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.