ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் மனைவியை கத்தியால் அறுத்துக் கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்தவர் கைது.!!

பொன்னாரி: சமீப காலமாக பொன்னேரி பகுதிகளில் பட்ட பகலில் தனியாக இருக்கும் பெண்களை நகைகளுக்கு ஆசைப்பட்டு கொலை செய்து தங்க நகைகளை கொள்ளை அடித்த கேடியை போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விபரம் வருமாறு பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகவல்லிபுரத்தை சேர்ந்த குமார் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் கூடுவாஞ்சேரி கனகவல்லிபுரம் லட்சுமி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் குமார் பொன்னேரி காவல் நிலையத்தில் ஆஜராகி கூறி இருப்பதாவது தான் பொன்னேரிக்கு சென்று விட்டு காலை 9 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி சரஸ்வதி வயது 55 இவர் கழுத்திலும் மார்பிலும் தலையிலும் கத்திக்குத்து காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் 5 சவரன் கொள்ளை போயிருந்தது . இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் நடந்த இடத்தை போலீசார் உதவியுடன் கைரேகை நிபுணர்கள் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அலசி ஆராய்ந்தனர் . இந்தக் கொலையை செய்தது குமாரின் உறவினர் அசோக் வயது 30 . செலவுக்கு பணம் சரஸ்வதியிடம் கேட்டான். அவரும் பணம் கொடுக்க மறுக்கவே கொலை வெறியில் மிருகத்தனமாக இருந்த அசோக் கத்தியை எடுத்து சரஸ்வதியை சத க் சதக் என்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தாலி செயினை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டான். இது குறித்து போலீசார் கேடி அசோக்கை துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். சரஸ்வதியின் பிரேத பரிசோதனை பொன்னேரி அரசு மருத்துவமனையில் நடந்தது. கொள்ளையடித்த தாலிச் செயினை போலீசார் மீட்டனர்.