செல்போனுக்கு லிங்க் அனுப்பி நூதன மோசடி… மீட்டு கொடுத்த திருப்பத்தூர் காவல் ஆய்வாளர்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த உசேத் வாஹப் என்பவருக்கு 03.02.23.ஆம் தேதி மாலை Dear user your ICICI Bank account will be blocked 09.30 pm Today please update your PANCARD immediately clik the link http://bitly.WS/AkwD என வந்த Message-ஐ நம்பி அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து Pancard- மற்றும் Personal Details ஐ அப்டேட் செய்தவுடன் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூபாய்.1,49,900/- பணத்தை நூதனமாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் எடுத்துள்ளனர்.

உடனே உசேத் சைபர் கிரைம் Helpline 1930 ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக 04.02.23 அன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் BVSc உத்தரவின் பெயரில். திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பிரேமா மற்றும் உதவி ஆய்வாளர் சரத்குமார் குழுவினர் உடனடியாக CSR.58/2023 ல் பதிவு செய்து மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி அவர் இழந்த ரூபாய்.1,49,900/- பணத்தை மீட்டு 07.02.23.ல் அவருடைய வங்கி கணக்கில் வரவு வைத்தனர்.

நேற்று  (21.03.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S. பாலகிருஷ்ணன்.,BVSc,  பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் இழந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணம் நேரில் ஒப்படைக்கப்பட்டது.

இதுவரை சுமார் 35 நபர்களுக்கு அவர்கள் இழந்த ரூ.17 லட்சம் வரை திரும்ப பெற்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது..