வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம்,வெள்ளி பொருட்கள் திருட்டு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மண்ணூர், அய்யப்பா காலனியை சேர்ந்தவர் லட்சுமண குமார் (வயது 38) டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 18ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு கோதவாடியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ1 லட்சம் பணம் 2 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.