இன்று எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி இது தான்- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் ..!

புதுமை பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

12ஆம் வகுப்பில் அரசு பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு உயர்கல்வியில் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை பெரும் வகையில் தமிழக அரசு புதுமை பெண் எனும் திட்டத்தை கொண்டு வந்ததது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக செயல்படுத்தி 1.16 லட்சம் மாணவிகள் பயன்பெற்றனர்.

தற்போது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாபிராம் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இரண்டாம் கட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1,04,347 மாணவிகள் பயனடைய உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், டிஜிபி சைலேந்திர பாபு என்னிடம் கூறியது என்னவென்றால், கடந்த முறை காவல் உதவி ஆய்வாளர் பணியாணை நிகழ்வில் பனியனை பெற்றுகொண்ட 17 காவலர்களில் 13 பேர் பெண்கள் என கூறினார். அதே போல, உயர்கல்வி துறை அமைச்ர் பொன்முடி கூறுகையில், உயர்கல்வி துறையில் கடந்த ஆண்டை விட இந்த புதுமைபெண் திட்டத்தால் இந்த கல்வியாண்டில் 27 சதவீதம் அதிகமாகியுள்ளது என்று கூறினார். இந்த செய்திகள் எனக்கு மகிழ்ச்சியான செய்தி என தெரிவித்தார்.

மேலும், நாடு செழித்து தன்னிறைவுடன் இருப்பதற்கு கல்வி மிகவும் அவசியம். அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்கு உருவானதுதான் திராவிட இயக்கம். பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர். அதே போல, பெண்களின் உரிமைக்காக போராடியவர் ராமமிர்தம் அம்மையார். அதனால் தான் புதுமைப்பெண் திட்டத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் மகளிர் சுய உதவிக்குழு உருவாக்கப்பட்டது. பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் முதல்வர் மு.கஸ்டாலின் தெரிவித்தார்.