நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் இது தானாம்… காத்திருக்கும் அறிவிப்புகள் என்ன?

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இது அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் ஆகும் .

முந்தைய இரண்டு பட்ஜெட்டுகளை போல இதுவும் காகிதம் அல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கமாக பட்ஜெட் தயாரிப்பு பணியின் இறுதி கட்டத்தை குறிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சகத்தில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடக்கும் . அந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது .நிதி அமைச்சகம் செயல்படும் வடக்கு பிளாக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நடந்தது .நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டும் பணியை தொடங்கி வைத்தார்.

மதிய நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி, பகவத் கீசன், ராவுகரத், நிதித்துறை செயலாளர் டி.வி சோமநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தயாரானவுடன் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நிர்மலா சீதாராமன் தன் கைப்பட அல்வா வழங்கினார்.