காதலியை கொன்று 35 துண்டுகளாக்கி வீசிய சைக்கோ காதலன்… 3 மணி நேரம் தேடுதலுக்கு பின் மேலும் 13 பாகங்கள் கண்டெடுப்பு..

காதலியை கொன்று 35 துண்டுகளாக்கி மாநகரின் வனப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு சென்று 3 மணி நேரம் தேடுதலில் ஈடுபட்டதில் மேலும் 13 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் காதலனுடன் தங்கி இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை 35 கூறுகளாக போடப்பட்டு தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் அஃப்தர் என்ற 28 வயதுமிக்க வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது வாலிபர் கொலை செய்து துண்டுகளாக்கிய பாகங்களை எங்கே வீசினார் என்பது குறித்து சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் ஒவ்வொன்றாக தேடி எடுத்தனர். மொத்தம் 13 உடல் பாகங்களை போலீசார் எடுத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ” தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அவர் எத்தனை பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். என்ன மனநிலையில் அவர் இருக்கின்றார். அவர் யார் யாருக்கெல்லாம் குறுந்தகவல் அனுப்பியிருக்கின்றார் போன்ற தகவல்களை சேகரித்து வருகின்றோம். அவர் பற்றிய தகவல்களை அறிந்து வருகின்றோம். கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றோம். எப்படி அவர் ஃப்ரிட்ஜுக்குள் வைத்தார் என்பதையும் விசாரித்துள்ளோம்.” என்றார்.

காதலியின் உடலை அப்புறப்படுத்துவதற்கு மொத்தம் 20 நாட்களானதாக அஃப்தாப் தெரிவித்துள்ளார். 35 உடல் கூறுகள் ஒவ்வொன்றையும் ஒரு பாலித்தீன் பையில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணி அளவில் இரண்டு இரண்டாக கொண்டு சென்று யாருக்கும் சந்தேகம் வராமல் வீசியுள்ளார்.