திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையம் – திறந்து வைத்தார் அமைச்சர் வேலு.!!

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்; செங்கம் சாலை சந்திப்பு ஆணாய்பிறந்தான்  மேற்கு காவல் நிலையத்தினை அமைச்சர் வேலு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது:
 முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ்நாடு காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு மாநில காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.   திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் 39 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் 7 மகளிர் காவல்நிலையங்கள் 1 குற்றவியல் காவல் நிலையம் 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் 4 மதுவிலக்கு ஆயத்தீர்வு காவல் நிலையங்கள் என மொத்தம் 54 காவல் நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
புதியதாக திறக்கப்பட்ட மேற்கு காவல் நிலையத்தில் 28 பணியாளர்கள் தமிழ்நாடு அரசு அனுமதித்து ஆணை வழங்கியுள்ளது. 28 காவல் பணியாளர்களும்  பணியில் சேர்ந்து உள்ளனர். திருவண்ணாமலையில் 7 காவல் உட்கோட்டங்கள் உள்ளது. திருவண்ணாமலை நகரம், ஊரகம் ஆரணி, போளுர், செங்கம், வந்தவாசி ஆகிய உட்கோட்டங்கள் மாவட்ட கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறனர். நமது மாவட்டத்தில் 1912 காவலர்கள் பணியாற்றுகிறார்கள் அதில் 497 பெண் காவலர்கள் பணியாற்றுகிறார்கள்.
 திருவண்ணாமலையில் ஆண்டுக்கு ஒரு முறை வரும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதில் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் தமிழ்நாட்டிலேயே வெகு விமர்சையாக மற்றும் அதிக பொதுமக்கள் கூடும் திருவிழா தீபத் திருவிழா சென்ற வருட திருவிழாவில் 35 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இதில் சிறு அசம்பாவிதங்கள் கூட ஏற்படவில்லை மிகவும் சிறப்பாக தீபத்திருவிழா நடத்தி முடிக்கப்பட்டது. தீபத் திருவிழா முடிந்து மக்கள் வீடு சென்று சேரும் வரை பெரும் பங்கு காவலர்களுக்கு தான் உண்டு.
தீபதிருவிழாவின் போது இம்மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் முதல் கடைசி காவல் வரை சிறப்பாக பணியாற்றினர்கள்.இதனை தொடர்ந்து மேற்கு காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு ரோந்து பணிக்காக ரூ.24 இலட்சம் மதிப்பில் 12 இருச்சக்கர வாகனத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  இந்நிகழ்ச்சியில் காவல் துறை தலைவர், வடக்கு மண்டலம் கண்ணன், காவல் துறை துணை தலைவர், வேலூர் சரகம் முத்துசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, அம்பேத்குமார் சரவணன், ஜோதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,  மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி,  நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகரமன்ற துணை தலைவர் ராஜாங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.