கோவை அருகே திருடன் என்ற நினைத்துசிற்பி அடித்து கொலை- 4 பேர் கைது..

கோவை அருகே திருடன் என்ற நினைத்துசிற்பி அடித்து கொலை- 4 பேர் கைது.. கோவை பேரூர் பக்கம் உள்ள மாதம்பட்டி,சிறுவாணி ரோடு ,இந்திரா காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவரதுமகன் வடிவேல்( வயது 42) சிலைகள் செய்யும் சிற்பி.இவர் நேற்று காளப்பட்டியில்
உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் பின்புறம் பிணமாக கிடந்தார்..இவரது உடலில் ரத்தக்காயம் இருந்தது. இது குறித்து காளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.,இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.பின்னர் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது..அந்த ஓட்டலில் வேலை செய்து வரும் வழியாம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 57 )ராஜ்குமார் (வயது 21) மற்றும் அவர்களது நண்பர்களான பால் துரை ( வயது 45) சந்தோஷ் குமார் (வயது 24) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர் .விசாரணையில் 4 பேரும் சேர்ந்து வடிவேலை அடித்துக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது இதை யடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போதுசிற்பி வடிவேல் அன்னூர் அருகே நாராயணபுரம் ஊராட்சி பகுதியில் சிற்ப வேலை செய்து வந்துள்ளார். வேலை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் பஸ்சில் கோவை திரும்பினார் அப்போது அவர் குரும்பபாளையத்தில் இறங்கி மது அருந்துவிட்டு சாப்பிட ஓட்டல் ஏதாவது உள்ளதா? என்று தேடி பார்த்தார் .அப்போதுதான் காளப்பட்டி சாலையில் வந்தபோது வேலை நடந்து வந்த அந்த ஒட்டலுக்கு சென்று சாப்பிட ஏதாவது உள்ளதா? என்று கேட்டுள்ளார் .அப்போது அங்கிருந்த மாரிமுத்து, ராஜ்குமார், பால் துரை, சந்தோஷ் குமார் ஆகியோர் சேர்ந்து நீ திருட தானே வந்தாய்? என்று கூறி 4 பேரும் சிற்பி வடிவேலுவை சரமாரி தாக்கி உள்ளனர். பின்னர் அவரை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த வடிவேல் அதே இடத்தில் உயிர் இழந்து உள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.