கோவை அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். வியாபாரி கைது..

கோவை அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். வியாபாரி கைது.. கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி அவர்கள் மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று கோவை- பாலக்காடு ரோடு சுகுணாபுரம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்தவழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் பொது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 25 கிலோ எடை கொண்ட 20 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளும் |காரும் பறிமுதல செய்யப்பட்டது. அரிசியின் உரிமையாளரான அஜ்மல் (19), த/பெ .அபிப் ரகுமான், அன்பு நகர், தெற்கு உக்கடம், கோவை என்பவரை கைது செய்து விசாரணை செய்தபோது இவர் உக்கடம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் உள்ள கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.