6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.!!

தமிழ்நாட்டில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறும் ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் பரப்புரை தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தின் பரப்புரையையும், பள்ளி மேம்பாட்டு திட்ட செயலியையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக பதவிகளில் அரசியல் தலையீடு இருப்பதாக வரும் புகார்கள் உண்மை இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொரோனா காரணமாகவே, இந்த ஆண்டு மே மாதத்தில், இறுதித் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அடுத்த ஆண்டில் வழக்கமான நாட்களிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.