தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரி: 10 – வது பட்டமளிப்பு விழா  

தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரி: 10 – வது பட்டமளிப்பு விழா  

தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரியின் 10 – வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவில் கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, செயலாளர் தாமோதரன், இணைச் செயலர் ஸ்ரீதர் மற்றும் கல்லூரி பொருளாளர் ரெங்கராஜ் @ கண்ணன் முன்னிலை நடைபெற்றது.

இதில் மதுரை காமராசர் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் குமார் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். இந்த விழாவில் 526 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ – மாணவியர்களுக்கு பட்டம் வழங்கினர். விழாவின் முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் G.சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் விழா அறிக்கையை வழங்கினார். இவ்விழாவில் கடந்த 2018 2021 கல்வியாண்டில் 6 பல்கலைக் கழக தரம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் திவ்யா, ராம்கணேஷ், சிவானி, திலீபன், லாவண்யா ஆகியோர் தரச் சான்றிதழ் பெற்றமைக்கு கல்லூரி நிர்வாகத்தினர் கௌரவித்தனர். இவ்விழாவில் கம்மவார் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.