பாலிடெக்னிக் மாணவர் திடீர் மாயம்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிருஷ்ணவேணி ராஜ் நகரச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பார்த்தசாரதி வயது 17 பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டி. எம். இ, இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை செந்தில்குமார் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.