கோவை இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் போடுவதாக மிரட்டிய வாலிபர் கைது..!

கோவை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 25) இவர் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராம் போலி கணக்கு தொடங்கியுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவுடன், அதனை வீடியோவாக மாற்றி சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு அனுப்பியுள்ளார் .மேலும் அந்தப் பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் செய்ய கோரி தொல்லை கொடுத்ததுடன், ஆபாசமாக சித்தரித்த பெண்ணின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி உள்ளார். இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் ஆன்லைன் மூலம் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரில் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.