கோவையில் கந்து வட்டி கேட்டு மிரட்டல்: பெண் மீது போலீசில் புகார்.!!

கோவை ராமநாதபுரம் என். ஏ .தேவர் விதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி .இவரது மனைவி நிர்மலா (வயது 56) புலியகுளத்தில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவர் தனது கணவர் மருத்துவ செலவுக்காக 5 ரூபாய் வட்டிக்கு சவுரிபாளையம் கோ. ஆப் ரேட்டிவ் காலனியை சேர்ந்த குணசுந்தரி என்பவரிடம் ரூ 1லட்சத்து 5 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.இதற்காக 2 செக்குகள் கொடுத்திருந்தார். நிர்மலா ரூ 30ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டார்.. இந்த நிலையில் முழு தொகை, ரூ1லட்சத்து 5 ஆயிரமும், 14 மாதம் வட்டியையும் சேர்த்து மொத்தம் ரூ 2 லட்சத்து 45 ஆயிரம் கொடுக்குமாறு குண சுந்தரி ,நிர்மலாவிடம் கேட்டு மிரட்டினாராம். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் குணசுந்தரி மீது கந்துவட்டி தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.