இயேசுவே உலக மக்களை காப்பாற்று….என்று எழுதி வீட்டில் தேசிய கொடி ஏற்றிய ஆசிரியர்: கைது செய்த போலீஸ்!!!

இயேசுவே உலக மக்களை காப்பாற்று….என்று எழுதி வீட்டில் தேசிய கொடி ஏற்றிய ஆசிரியர்: கைது செய்த போலீஸ்!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனது வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை சில வார்த்தைகளை எழுதியதோடு, தேசிய கொடியை அவமதித்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனியார் பள்ளி ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

இந்திய சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய, மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கப்பட்ட நிலையில், வழக்காம உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தேசிய கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனது வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை சில வார்த்தைகளை எழுதியதோடு, தேசிய கொடியை அவமதித்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனியார் பள்ளி ஆசிரியரை கைது செய்துள்ளனர். தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த எபின் 36 இவர் தாராபுரம் பிரபல பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றி இந்தியா ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும் மரியாதை செலுத்தப்பட்டது.

அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசியக் கொடியில் இயேசுவே உலக மக்களை காப்பாற்று என்ற வாசகம் எழுதிய தேசிய கொடியை மேல் கட்டி உள்ளார் .இது குறித்து அப்பகுதி மக்கள் தாராபுரம் போலீசில் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பெயரில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது எபின் 36 தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரிந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.