தமிழகத்தில் வரும் காலங்களில் காவல் துறையின் சேவை சிறப்பாக இருக்கும்- டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி..!

மிழகத்தில் வரும் காலங்களில் காவல்துறையின் சேவை தரம் சிறப்பாக இருக்கும்
டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் 25வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் பத்தாயிரம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அடுத்த கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்க பயிற்சி அளிக்கப்பட்டு மார்ச் 1ம் தேதி முதல் காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். 4,44 உதவி ஆய்வாளர்கள் நியமிக்க தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் 600 உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது என்று கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல்துறை பணிக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன்
காத்திருக்கின்றனர். அவர்கள் கேட்பதற்கு முன்பே காவல்துறையில் பணி அமர்த்தும் பணிகள் நடைபெறும். வரும் காலங்களில் காவல் நிலையங்கள் இளமையாக காட்சி அளிக்கும். குறிப்பாக காவல் நிலயங்களுக்கு வரும் பொது மக்களின் புகார்களை பெற்று குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காணும் நடவடிக்கையாக 2,300 பேர் காவல் நிலைய வரவேற்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காவல் துறையினர் சேவை சிறப்பாக இருக்கும்.

மேலும் செல்போன் பயன்பாட்டினால் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில் பலர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகிறார்கள். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் தற்கொலை செய்ய நேரிடுகிறது. எனவே இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.