கோவை : கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் மிர்மாலினி (வயது 23) சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.இவர் தங்கி இருந்த அறையின் கதவை பூட்டாமல் பாத்ரூம் சென்றிருந்தார். அப்போது யாரோ அறையில் புகுந்து அங்கிருந்த செல்போனை திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து மாணவி மிர்மாலினி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வரதராஜபுரம் உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(வயது 49) என்பவரை நேற்று கைது செய்தனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply