2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – டிரைவர் பரிதாப பலி..

கோவை பீளமேட்டில் உள்ள நியூ ஸ்கீம் ரோட்டில் நேற்று 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில் ஒரு காரை ஒட்டி வந்த கே.கே. புதூர் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்த டிரைவர் ஜனார்த்தனன் (வயது 43) என்பவர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..