கோவை மதுக்கரையை அடுத்த பாலத்துறை பக்கம் உள்ள கருஞ்சாமி கவுண்டம்பாளையம். ஷோபா நகரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 34) இவர் தைப்பூசத்தை ஒட்டி கடந்த 5-ந் தேதி பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.பொள்ளாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது இவரது வீடு தீப்பிடித்து எரிவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் இவருக்கு தகவல் கொடுத்தனர்.இவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் பணம் ரூ.68 ஆயிரம், 5 பவுன் தங்க நகைகள், குடும்பத்தினருடைய அசல் அடையாள அட்டைகள், சான்றிதழ்கள் எரிந்து சேதமடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து வீரக்குமார் மதுக்கரை போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply