100 கோடியில் சொந்த ஹெலிகாப்டர் வாங்கிய முதல் இந்தியர்:அசத்தும் கேரள தொழிலதிபர்-யார் தெரியுமா..?

கேரளாவின் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான ரவி பிள்ளை வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை வைத்துக்கொண்டு பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறார்.

மேலும் கேரளாவிலும் பல வர்த்தகத்தை வைத்துள்ளார், இந்நிலையில் நாட்டின் முன்னணி பணக்காரர்களைப் போலவே தற்போது புதிய ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார்.

இதன் மூலம் கேரளாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் வாங்கிய தொழிலதிபராக ரவி பிள்ளை திகழ்கிறார். சரி ஹெலிகாப்டர் விலை என்ன தெரியுமா..?!

ஆர்பி குரூப் நிறுவனத்தின் தலைவரான பி.ரவி பிள்ளை முதல் முறையாக ஒரு ஹெலிகாப்டர்-ஐ வாங்கியுள்ளார், குறிப்பாக இந்த ஹெலிகாப்டர்-ஐ இந்தியாவில் பயன்படுத்துவதற்காக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரவி பிள்ளை வாங்கியது ஏர்பஸ் நிறுவனத்தின் H-145 ரக ஹெலிகாப்டர், இது இந்தியாவின் முதல் ஏர்பஸ் D3 ஹெலிகாப்டர், முதல் 5 பிளேடு கொண்ட ஹெலிகாப்டர் ஆகவும் விளங்குகிறது. இதன் விலை சுமார் 100 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் சுமார் 7 பேர் பணிக்கக் கூடிய அமைப்பை கொண்டது.

ரவி பிள்ளைக்காக ஏர்பஸ் நிறுவனம் கேரள மாநிலத்தின் கோவளத்தில் ஹெலிகாப்டரை டெலிவரி செய்துள்ளது. ஹெலிகாப்டர் கைப்பற்றிய கையோடு கோவளத்தில் இருந்து ரவிஸ் அஷ்டமுடி என்னும் ரெசார்ட்-க்கு முதல் பயணத்தை மேற்கொண்டார் ரவி பிள்ளை.

சிட் பண்ட் கம்பெனியில் துவங்கிய இன்று பல துறையில் இந்தியா, துபாயில் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்கியுள்ளார் ரவி பிள்ளை. தற்போது ஆர்பி குரூப் நிறுவனத்தில் சுமார் 70000 ஊழியர்களைக் கொண்டு சிறப்பான வளர்ச்சி பாதையில் உள்ளது. மேலும் 2.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் ரவி பிள்ளை.