கே-ரயில் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கேரள அரசு கே-ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அதிவேக ரயில் மூலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 529.45 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணிநேரத்தில் பயணிக்கலாம்.
இந்த திட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவையிலும் கேரள காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்த கேரள முதல்வர், கே-ரயில் திட்டம் உள்ளிட்ட மாநிலப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, உக்ரைனில் உள்ள கேரள மாணவர்களை பாதுகாப்பாக மீட்கக்கோரி முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply