வரும் 16-ந் தேதி பழைய வாகனங்கள் ஏலம்-கோவை மாநகர காவல் துறை அழைப்பு..!

கோவை மாநகர காவல் துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகர போலீசாரால் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்கள் – 15 மற்றும், 22 பைக்குகள் என, 37 வாகனங்கள், வரும், 16ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கோவை அவிநாசி ரோடு பி.ஆர்.எஸ்., மைதானத்தில், ஏலம் விடப்படுகிறது.
அவை, பொதுமக்கள் பார்வைக்காக, 14-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.ஏலம் எடுக்க விரும்புவோர்,வாகனங்களை பார்வையிட்டு, 15ம் தேதி மாலை, 5 மணிக்குள் டெபாசிட் தொகை செலுத்தலாம்.
பைக்குகளுக்கு ரூ .ஆயிரமும், 4 சக்கர வாகனத்துக்கு ரூ.2, ஆயிரமும் செலுத்தி, பெயர்களை பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுப்பவர்கள் ஜி.எஸ்.டி., வரியுடன் முழுத்தொகையை அன்றே செலுத்த வேண்டும். விவரங்களுக்கு, 0422 – 2241 795.எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.