போலீசை கண்டதும் பாலத்திலிருந்து குதித்த பிரபல கொள்ளையன் கால் முறிந்தது..!

மேட்டுப்பாளையம் காவல் நிலைய வழிப்பறி வழக்கில் ஒருவரை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி தலைமறைவாக இருந்த கொள்ளையன் சூர்யா ( வயது 21)
சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யாவை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசாரை பார்த்ததும் தப்பிப்பதற்காக ஓடந்துறை பாலத்தில் இருந்து சூர்யா குதித்தான். அப்போது அவனது வலது காலில் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்..இவன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி மற்றும் திருட்டு உள்பட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது..