போரூர் பகுதியில் ஆட்டோவில் ஆபத்தான முறையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக சாகசம் செய்ததாக சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஊடங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த 19.9.2024 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் பூந்தமல்லியில் இருந்து போரூர் செல்லும் சாலையில் ஐயப்பன் தாங்கல் பஸ் டிப்போ அருகில் tn18ak 4132 என்ற பதிவு எண் கொண்ட ஆட்டோவில் அதன் உரிமையாளர் வேலு வயது 42 தகப்பனார் பெயர் வெங்கடேசன். மதுரம் நகர் கொளுத்துவாஞ்சேரி. ஐயப்பன் தாங்கல் போரூர்.சென்னை என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் இவருடன் சேர்ந்து ஆட்டோவில் சாகசத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து பொது இடத்தில் அதி வேகமாகவும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பாதுகாப்பற்று முறையில் முரட்டுத்தனமாக ஆட்டோ ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டதாக குற்றவாளி வேலு வயது 42. வெங்கடேசன் என்பவரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வேலு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டோ சாகசத்தில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Leave a Reply