மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி..!

மிழ்நாட்டின் மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றுதலுக்கு நேற்று ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று ஆளுநர் மாளிக்கையில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டு வருகின்றனர்.இதில், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு தமிழக அமைச்சரவையில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்றுள்ள செந்தில் பாலாஜி 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.