பெற்ற மகனையே மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு எரித்து கொல்ல முயன்ற கொடூர தாய் கைது..!

கோவை: கோவை காந்தி பார்க்,சுக்கிரவர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் குமார் ( வயது 29) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் வேறு ஜாதி பெண் ஒருவரை காதலித்து வந்தார். இது இவரது தாய் ராணிக்கு பிடிக்கவில்லை.குமாரை கண்டித்தார் காதலை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் குமார் அதைக் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராணி நேற்று முன்தினம் குமார் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது அவரது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . இது குறித்து குமார் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக குமாரின் தாயார் ராணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.